உலகயளவில் கார் உற்பத்தியில் முதன்மையாக விளங்கி வந்த டொயோட்டா-வை பின்னுக்கு தள்ளி ஃபோக்ஸ்வேகன் கடந்த 2016 யில் முதல் 6 மாதங்களின் விற்பனை முடிவில் தெரிய வந்துள்ளது.
சுற்றுசூழல் மாசு மோசடியால் நற்பெயரை இழந்திருந்தாலும் அவற்றையெல்லாம் ஒரங்கட்டி விட்டு ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனையில் முன்னேறியுள்ளது. ஜிஎம் நிறுவனத்தை வீழ்த்தி தொடர்ச்சியாக நான்கு வருடங்களாக முன்னிலை வகித்து வந்த டொயோட்டா நிறுவனம் கடந்த முதல் 6 மாதங்களில் 4,991,741 கார்களை விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் 5,199,000 கார்களை ஃபோக்ஸ்வேகன் குழுமம் விற்பனை செய்துள்ளது. ஜிஎம் 4,760,000 கார்களை விற்பனை செய்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
2015 ஆம் ஆண்டில் வெளிவந்த ஃபோக்ஸ்வேகன் எமிஷன் மோசடியால் பெரும் இழப்பீட்டினை சந்திதுள்ள நிலையில் அதனை ஈடுகட்டும் வகையில் ஃபோக்ஸ்வேகன் எழுச்சி பெற்று வருகின்றது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மொத்த கார் உற்பத்தி முதல் 6 மாதங்களில் 5,268,000 கார்களாகும். இதே காலகட்டத்தில் டொயோட்டா குழுமத்தின் மொத்த உற்பத்தி 5,033,177 கார்களாகும். 2015 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுடன் ஒப்பீடுகையில் டொயோட்டா கார் உற்பத்தி 0.4 சதவீதம் அதிகரித்திருந்தாலும் விற்பனை 0.6 சதவீதம் சரிந்துள்ளது. இதே காலகட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் உற்பத்தி உற்பத்தி 0.6 சதவீதம் சரிந்திருந்தாலும் விற்பனை 2.1 சதவீதம் சரிந்துள்ளது.
உலகின் முதன்மையான கார் தயாரிப்பு நிறுவனமாக 2018 ஆம் ஆண்டுக்குள் இடம்பிடிக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.