மத்திய சீனாவின் ஹெனான் மாகனத்தை சேரந்த கிராமத்து இளைஞரான ஷி சாங்போ 17வயதிலே பள்ளி படிப்பை விட்டுள்ளார். அதன் பிறகு விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயற்சி பணியாளர்களாக சில வருடம் வேலை செய்துள்ளார்.
இவர் உருவாக்கியிருக்கும் ஆகாய கப்பலின் நீளம் 23 மீட்டர் மற்றும் உயரம் 10 மீட்டர் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அகாய கப்பலை கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்திய பொழுது வெற்றிகரமாக முதல் சோதனை கடந்துள்ளதாம். 500மீட்டர் உயரம் வரை பறந்து இரண்டு மணி நேரம் வானில் மிதந்து 8 முறை தரையிறக்ப்பட்டு நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஷீ சங்போ தனது சிறு வயது முதலே சகோதரனின் புத்தகத்தில் உள்ள விமானங்களின் படங்களை பார்த்து வரும்பொழுது எனக்கு இது போன்ற விமானத்தை வடிவமைக்கப்பட வேண்டும் என்று கனவு உருவானதாக தெரிவித்துள்ளார். இதனை தயாரிக்க இந்திய மதிப்பில் 31 லட்சம் (300000 Chinese Yuan) செலவு செய்துள்ளார்