நாள்தோறும் விபத்துகள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் கடுமையான நடவடிக்கைகளின் வாயிலாகவே விபத்துகளை கட்டுப்படுத்தும் முடியும் என்பதனை உணர்ந்துள்ள புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
ஓட்டுநர் உரிமம் ரத்து
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சாலை பாதுகாப்புக்குழு ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் உயர்நீதிமன்ற சாலை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையை ஏற்று வாகன ஓட்டிகளுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் முக்கிய அறிவிப்புகள் பின் வருமாறு ;-
- இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணிந்திருப்பது மிக அவசியாமாகின்றது.
- முழுமையான ஆவனங்கள் இல்லாத அதாவது காப்பீட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்கள் சிறைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வேகமாக வாகனத்தை இயக்கினால் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்
- குடிபோதையில் வாகனம் ஒட்டினாலோ, சிவப்பு விளக்கை எரியும்போது மீறினாலோ, செல்போன் பயன்படுத்தல், அதிக ஆட்களை ஏற்றுதல், மற்றும் சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஓட்டுநர் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
- இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும், சோதனை ஆய்வின்போது அதைக் காண்பிக்க தவறினால் உங்கள் வாகனம் சிறைப்பிடிக்கப்படலாம்.
வேகம் விவேகம் அல்ல..!