ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இரண்டுமே மிக சிறப்பான வகையில் கார்களில் உதவும் தன்மை கொண்ட செயலியாகும். இரண்டுமே கார்களில் வழங்கப்படுகின்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் இடம்பெற்றிருக்கும்.
ஆப்பிள் கார் பிளே
ஆப்பிள் ஐஓஎஸ் தளத்தில் இயங்கும் கார் பிளே ஆப்ஸ் வாயிலாக ஆப்பிள் ஐபோன் உதவியுடன் உங்களுடைய காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல பயனுள்ள வசதிகளை பெறலாம். குறிப்பாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை பெற உதவும். ஐபோன்7 ஐபோன் 6 , ஐ போன் 6 பிளஸ் , ஐபோன் 5, ஐபோன் 5c மற்றும் ஐபோன் 5s போன்ற மாடல்களில் இயங்கும்.
ஆண்ட்ராய்ட் ஆட்டோ
கார் பிளே போன்றே ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான சிறப்பு அம்சங்களை கொண்ட ஆட்டோ ஆப்ஸ் வாயிலாக நேவிகேஷன் , மேசேஜ் , மியூசிக் என பலவற்றை காரில் உள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக பெறலாம்.
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அல்லது அதற்கு மேல் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கும்.
இரண்டு செயலிகளும் நீங்கள் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களை கொண்டு பயன்படுத்தி கொள்ள இயலும்.