வரும் செப்டம்பர் 15ந் தேதி தொடங்க உள்ள பிராங்பேர்ட் மோட்டார் கன்காட்சியில் ஆடி e-டிரான் குவாட்ரோ எலக்ட்ரிக் காரின் பார்வைக்கு வரும் . 2018ம் ஆண்டில் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யுவி விற்பனைக்கு வரவுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள எஸ்யூவி டீசரில் தோற்றமைப்பில் வழக்கம் போல அழகான தோற்றதுடன் கம்பீரத்தை கொண்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி தளத்தில் உருவாக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி இலகுஎடை மற்றும் உறுதிமிக்க பாகங்களுடன் விளங்கும்.
உட்புறத்திலும் பலதரப்பட்ட சொகுசு வசதிகள் மற்றும் டிஜிட்டல் அம்சங்களை பெற்றிருக்கும். 4 இருக்கை கொண்ட மாடலாக விளங்கும்.
மூன்று மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் ஒன்று மற்றும் பின்புறத்தில் இரண்டு ஆகும். சார்ஜ் ஏறும் நேரமும் குறைவாக இருக்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் ஏறினால் 500கிமீ வரை பயணிக்க இயலும்.
Audi e-tron Quattro concept sketch