வருகின்ற பண்டிகை காலத்தை ஒட்டி கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு சலுகை மற்றும் பரிகளை வழங்க உள்ளது. அந்த வரிசையில் ஆடி க்யூ3 எஸ்யூவி காருக்கு சிறப்பு இஎம்ஐ மற்றும் கூடுதல் வாரண்டியை அனைத்து ஆடி டீலர்களும் வழங்குகின்றனர்.
சொகுசு ரக இந்திய சந்தையில் தொடக்க நிலை எஸ்யூவி ரக கார் மாடலாக விளங்கும் ஆடி க்யூ3 எஸ்யூவி கார் மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் பெட்ரோல் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் இருவிதமான ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. அவை 140 hp (30 TDI S Edition) மற்றும் 176 hp (35 TDI quattro) பவரை வெளிப்படுத்தி 7 வேக எஸ்ட்ரானிக் ஆட்டோ கியர்பாக்ஸ் வழியாக ஆற்றலை சக்கரங்களுக்கு எடுத்து செல்கின்றது.
க்யூ3 சலுகை விபரம்
டெல்லி மற்றும் தலைநகர் பகுதியில் இஎம்ஐ ரூ.48,888 யில் தொடங்கி டவுன் பேமென்ட் ரூ.5.99 லட்சம் ஆகும்.
சென்னையில் 4 வருட வாரண்டி , 4 வருட சர்வீஸ் பிளான் , 4 வருட பைபேக் சலுகை 45 சதவீதம் மற்றும் 4 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டடுள்ளது.
மும்பையில் ரூ.30.78 லட்சம் விலையில் தொடங்கும் ஆடி க்யூ3 காரின் குறைந்தபட்ச இஎம்ஐ ரூ. 26,999 ஆகும்.
பெங்களூருவில் 0 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது.
நகரங்களின் அடிப்படையில் சலுகைகள்
நகரம் | சலுகைகள் |
Delhi/ NCR | EMI – 48,888, down payment – 599,000 |
Chennai | 4 years warranty, 4 year service plan, 4 years buyback at 45%, 4% rate of interest |
Mumbai | Starting Price – 30.78 Lacs and Low EMI – 26,999/- |
Bangalore | 0% rate of interest |