மிக கடுமையான போட்டி நிறைந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை ரூ. 53,700 முதல் ரூ.1,12,300 வரை குறைக்கபட்டுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா வரவால் இந்த நடவடிக்கையை ஃபோர்டு எடுத்திருக்கலாம்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரு தினங்களிலே 5600 முன்பதிவுகளை மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கடந்துள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காம்பேக்ட் ரக பிரிவில் முன்னிலை வகித்துவந்த ஈக்கோஸ்போர்ட் டியூவி300 எஸ்யூவி காரின் வரவால் கடுமையான சவாலினை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
தற்பொழுது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மிகுந்த சவாலான தொடக்க விலையில் அமைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரு ஆப்ஷனிலும் ஈக்கோஸ்போர்ட் கிடைக்கின்றது. டியூவி300 மற்றும் பிரெஸ்ஸா போன்ற கர்கள் டீசல் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.
மேலும் படிக்க ; மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் புதிய விலை பட்டியல்
பெட்ரோல் வேரியண்ட்
வேரியண்ட் புதிய விலை பழைய விலை வித்தியாசம்
1.5 Ambient | ரூ 6,68,800 | Rs 7,22,500 | Rs 53,700 |
1.5 Trend | Rs 7,40,900 | Rs 8,18,300 | Rs 77,400 |
1.0 Trend+ | Rs 8,18,900 | Rs 8,96,300 | Rs 77,400 |
1.5 Titanium | Rs 8,56,500 | Rs 9,33,900 | Rs 77,400 |
1.5 Titanium AT | Rs 9,61,500 | Rs 10,36,300 | Rs 74,800 |
1.0 Titanium+ | Rs 9,45,000 | Rs 10,32,400 | Rs 87,400 |
டீசல் விலை பட்டியல்
வேரியண்ட் | புதிய விலை | பழைய விலை | வித்தியாசம் |
1.5 Ambiente | Rs 7,28,800 | Rs 8,41,100 | Rs 1,12,300 |
1.5 Trend | Rs 8,00,900 | Rs 9,13,200 | Rs 1,12,300 |
1.5 Trend+ | Rs 8,48,900 | Rs 9,61,200 | Rs 1,12,300 |
1.5 Titanium | Rs 9,16,500 | Rs 10,28,800 | Rs 1,12,300 |
1.5 Titanium+ | Rs 9,75,000 | Rs 10,87,300 | Rs 1,12,300 |
{ அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை }