Categories: Auto News

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை உயர்வு

ஃபோர்டு அதிரடியாக அறிமுகம் செய்த சில மாதங்களிலே ரூ30000 முதல் ரூ.50000 வரை ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி விலையை உயர்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்தான் முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தியது.

9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை வந்ததால் தற்காலிகமாக பெட்ரோல் வேரியண்ட்கள் மற்றும் டாப் டீசல் வேரியண்ட்களுக்கான முன்பதிவினை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விலை உயர்வினை அறிவித்துள்ளது.

cd685 ecosport

ஈக்கோஸ்போர்ட் விலை உயர்த்தப்பட்ட விபரம்  (அடைப்புக்குள் இருப்பது முந்தைய விலை)

1.5 ஆம்பின்ட் பெட்ரோல்— 5.85 லட்சம் (ரூ5.59 லட்சம்)
1.5 டிரென்ட் பெட்ரோல்—–6.80 லட்சம்  (ரூ6.49 லட்சம்)
1.5 டைட்டானியம் பெட்ரோல்–7.91 லட்சம்  (ரூ7.50 லட்சம்)
1.5 டைட்டானியம் பெட்ரோல்(ஆட்டோமேட்டிக்)–8.70 லட்சம்   (ரூ8.44 லட்சம்)

1.5 ஆம்பின்ட் டீசல்—7.04 லட்சம்   (ரூ6.69 லட்சம்)
1.5 டிரென்ட் டீசல்—–7.91 லட்சம்  (ரூ7.60 லட்சம்)
1.5 டைட்டானியம் டீசல்–9.02 லட்சம்   (ரூ8.61 லட்சம்)
1.5 டைட்டானியம் டீசல்(O)–9.40 லட்சம்  (ரூ8.99 லட்சம்)

1.0 டைட்டானியம் பெட்ரோல்–8.31 லட்சம்    (ரூ7.89 லட்சம்)
1.0 டைட்டானியம் பெட்ரோல்(O)-8.69 லட்சம்   (ரூ8.28 லட்சம்)

டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை