இந்தியாவில் மிக எதிர்பார்க்கப்படும் கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி முதன்மை வகிக்கின்றது. வருகின்ற ஜூன் மாதம் விற்பனைக்கு வருவதனை உறுதி செய்துள்ளது. மேலும் ஜூன் முதல் முன்பதிவு தொடங்குகின்றது.
10 விதமான மாறுபட்டவையில் வெளிவரவுள்ள ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி இந்திய எஸ்யூவி சந்தையில் தனியான இடத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈக்கோஸ்போர்ட் காரில் இந்தியாவிலே முதன்முறையாக அதிநவீன அவசர கால சேவையை வழங்கவுள்ளது. விபத்து நேரிட்டால் உடனடியாக உங்கள் அலைபேசி 108 சேவை மையத்திற்க்கு அழைத்து உதவி கோரும். இதனால் விரைவாக விபத்தில் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி கிடைக்கும்.
வரும் ஜூன் 1 முதல் முன்பதிவு தொடங்கின்றது. மேலும் ஜூன் 11 தேதி முதல் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.