16,444 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களில் பின்புற சஸ்பென்ஷன் ட்விஸ்ட் பீமியில் உள்ள போல்ட்கள் போதுமான டைட் இல்லாத காரணத்தால் விபத்துகள் ஏற்ப்பட வாய்ப்புள்ளதால் திரும்ப அழைக்க ஃபோர்டு முடிவெடுத்துள்ளது.
இகோஸ்போர்ட் காரின் பின்புற சஸ்பென்ஷன் அமைப்பில் உள்ள ரியர் ட்வீஸ்ட் பீம் பகுதியில் உள்ள பைவோட் போல்ட்டில் போதுமான இறுக்கம் இல்லாமல் இருப்பதாக ஃபோர்டு கண்டுறிந்துள்ளது.
போதுமான இறுக்கம் இல்லாத காரணத்தால் பைவோட் போல்ட் உடையவும் , வாகனத்தின் கையாளுதல் தன்மை இழக்க வாய்ப்புள்ளதால் 2013ம் ஆண்டு நவம்பர் முதல் 2014ம் ஆண்டு ஏப்ரல் வரை தயாரிக்கப்பட்ட எகோஸ்போர்ட் கார்களை ஃபோர்டு திரும்ப அழைக்கின்றது.
மேலும் இந்த காரணத்தால் இதுவரை எந்த விபத்தும் ஏற்படவில்லை என ஃபோர்டு தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள கார்களின் உரிமையாளர்களுக்கு ஃபோர்டு அழைக்க தொடங்கியுள்ளது.
Ford EcoSport recalled