ஃபோக்ஸ்வேகன் புதிய என்ஜின் பொருத்தபட்ட வென்டோ ஜிடி மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதி செய்துள்ளது. தற்பொழுது பொருத்தப்பட்டுள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜினுக்கு பதிலாக 1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
1.2 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் போலோ ஜிடி மாடலில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின் ஆகும். இதன் ஆற்றல் 103 பிஎச்பி ஆகும். 7 வேக இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப்புறம் மற்றும் உட்ப்புற கட்டமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் கிடையாது. ஜிடி என்ற முத்திரை பொறிக்கப்பட்டிருக்கும். மிக அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை தருவதற்க்காகவே என்ஜினை புதிதாக ஃபோக்ஸ்வேகன் உருவாக்கியுள்ளது