உலக பிரசத்தி பெற்ற ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் இந்த ஆண்டின் இறுதிக்குள் மீண்டும் இந்திய சந்தையில் நுழைகின்றது. ஃபோக்ஸ்வேகன் பீட்டல் 2009ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தபொழுது சரியான வரவேற்பினை பெறவில்லை.
ஃபோக்ஸ்வேகன் பீட்டல் கார் |
1934ம் ஆண்டில் ஹிட்லர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட பீட்டல் கார் தொடர்ந்து பல மாற்றங்களை கண்டு விற்பனையில் உள்ளது. தற்பொழுது இந்தியாவிற்க்கு வரவுள்ள புதிய பீட்டல் 2011ம் ஆண்டில் விற்பனைக்கு வந்தது.
முந்தைய மாடலில் இருந்த நல்ல சிறப்பான தோற்றத்தினை பெற்றுள்ள ஃபோக்ஸ்வேகன் பீட்டல் காரில் பல நவின வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும். இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் உள்ள பீட்டல் கார் இந்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் பீட்டல் காரில் விலை ரூ.32 லட்சம் முதல் 35 லட்சத்திற்க்குள் இருக்கும். முழுதாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட உள்ளது.
VW Beetle Coming this Year End