இந்திய ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி , பீட்டல் , பஸாத் என மூன்றும் கூடுதலாக காம்பெக்ட் செடான் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி என மொத்தம் 5 கார்களை இந்திய சந்தைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்துள்ளது.
ஃபோக்ஸ்வேகன் பஸாத் |
8வது தலைமுறை ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் இந்தியாவில் இடுத்த வருடத்தின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய பஸாத் கூடுதலான இடவசதி , நவீன் வசதிகள் , சொகுசு தன்மை போன்றவற்றை கொண்டிருக்கும்.
இரண்டாம் தலைமுறை பீட்டல் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள நிலையில் சர்வதேச அளவில் மூன்றாம் தலைமுறை பீட்டல் விற்பனை செய்யப்படுகின்றது. புதிய பீட்டல் கார் விரைவில் இந்தியாவிற்க்கு வருகின்றது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் டிகுவான் எஸ்யூவி இந்தியாவில் வருவதனை உறுதி செய்துள்ளனர். மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபவத்தினை டிகுவான எஸ்யூவி வழங்கும்.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்யூவி |
புதிய காம்பேக்ட் செடான் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வரலாம். புதிய காம்பேக்ட் எஸ்யூவி 2017ம் ஆண்டில் விற்பனைக்கு வரும்.
புதிய ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ அறிமுகம்
Volkswagen India plan to launch Tiguan SUV