லீனியா மாடலுக்கு மாற்றக வரவுள்ள டிப்போ கார் இரண்டு விதமான பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் உள்ளது. 40க்கு மேற்பட்ட நாடுகளில் விற்பனைக்கு வரவுள்ள ஃபியட் டிப்போ இந்தியாவிற்க்கு வருமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தோற்றத்தில் மிக நேர்த்தியாக அமைந்துள்ள ஃபியட் டிப்போ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது. 4.5 மீட்டர் நீளமும் , 1.78 மீட்டர் அகலமும் மற்றும் 1.48மீட்டர் உயரமும் கொண்டுள்ள டிப்போ காரில் 2.64மீட்டர் வீல் பேஸ் உள்ளதால் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும். இதன பூட்ஸ்பேஸ் 510 லிட்டர் கொள்ளளவு இருக்கும்.
உட்புறத்தில் 5 ” வண்ண தொடுதிரை டிஸ்பிளே , யூகனெக்ட் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் நேவிகேஷன் அமைப்பு, தானியங்கி முகப்பு விளக்கு, மழைய உணர்ந்து செயல்படும் வைப்பர் , தானியங்கி கிளைமேட் கட்டுப்பாடு , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , பின்புற பார்க்கிங் சென்சார் , பின்புற பார்க்கும் கேமரா போன்ற வசதிகளை பெற்றுள்ளது.
ஃபியட் டிப்போ காரில் 94 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் FIRE பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
118 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் Etroq பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் உள்ளது.
ஃபியட் டீசல் மாடலில் 95 ஹெச்பி ஆற்றலை தரவல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 120 ஹெச்பி ஆற்றலை தரவல்ல 1.6 லிட்டர் மல்டிஜெட் என்ஜினில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு என்ஜின்கள் உள்ளது.
ஹோண்டா சிட்டி , ஹூண்டாய் வெர்னா , ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ மற்றும் ஸ்கோடா ரேபிட் போன்ற மாடல்களுக்கு போட்டியாக டிப்போ விளங்கும். டிப்போ என்ற பெயரினை ஃபியட் முன்பே வெளிநாடுகளில் விற்பனை செய்த மாடலாகும்
துருக்கியில் விற்பனைக்கு செல்ல உள்ள மாடல் எகயா என்ற பெயரிலும் ஐரோப்பியா மற்றும் ஆப்பரிக்கா நாடுகளில் டிப்போ என்ற பெயரில் விற்பனை செய்யப்படும்.
ஃபியட் டிப்போ படங்கள்
Fiat Tipo sedan details