அட்வென்ச்சர் ரக சந்தையில் மிக சிறப்பான திறனை வெளிப்படுத்தக்கூடிய பட்ஜெட் விலை மோட்டார்சைக்கிள் மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்
நகரம், நெடுஞ்சாலை மற்றும் ஆஃப்ரோடுகளுக்கு ஏற்ற வகையிலான கட்டுமானத்தை பெற்றுள்ள ஹீரோ எக்ஸ்பல்ஸ் மோட்டார்சைக்கிள் முதன்முதலாக EICMA 2017 அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உற்பத்தி நிலை மாடலாக காட்சிக்கு வந்துள்ளது.
சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 200சிசி சந்தையில் பட்ஜெட் விலையில் வரவுள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக்கினை அறிமுகம் செய்திருந்த நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் உற்பத்தி நிலை எக்ஸ்பல்ஸ் பைக்கில் மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட எஞ்சினாக விளங்க உள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் பொருத்தப்பட உள்ள எஞ்சின் அதிகபட்சமாக 18 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 17 என்எம் டார்க் வழங்கும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மிக சிறப்பான வகையில் எஞ்சினை பேலன்ஸ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஷாஃப்ட்கள் அதிர்வுகளை முழுமையாக கட்டுப்படுத்தும் என ஹீரோ தெரிவித்துள்ளது.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனுடன், 0-60 கிமீ வேகத்தை எட்டுவதற்ககு வெறும் 4.6 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.
எக்ஸ்பல்ஸ் பைக்கில் முன்புறத்தில் 190 மிமீ பயணிக்கும் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 21 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு ஸ்விட்சபிள் ஏபிஎஸ் பெற்றிருப்பதுடன், பின்புறத்தில் 170 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் அப்சார்பருடன் , 18 அங்குல வீலுடன் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு உள்ளது.
வெள்ளை நிறத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் பைக்கில் முழுமையான இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டருடன் நேவிகேஷன், முழு எல்இடி ஹெட்லைட், வின்ட் ஷீல்டு உட்பட பல்வேறு அம்சங்களை பெற்றுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் உற்பத்தி நிலை மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விலை ரூ.1.00 லட்சம் முதல் 1.20 லட்சம் விலைக்குள் நவம்பர் 2018-க்குள் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.