ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை ஃபோக்ஸ்வேகன் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டுகாட்டி மோட்டார் சைக்கிள்
- உலக பிரசத்தி பெற்ற சூப்பர் பைக் தயாரிப்பாளராக டுகாட்டி விளங்குகின்றது.
- தற்பொழுது டுகாட்டி பைக் நிறுவனம் ஆடி கார் நிறுவனத்தின் தலைமையில் செயல்படுகின்றது.
- ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் டீசல்கேட் பிரச்சனையை தொடர்ந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாசு கட்டுப்பாடு தொடர்பான பிரச்சனை வெளிவந்ததை தொடர்ந்து சில பிராண்டுகளை விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டிருந்தது. அதாவது கார் தொடர்பான தயாரிப்பு அல்லாமல் உள்ள ஆட்டோமொபைல் பிரிவுகளில் செயல்படும் டுகாட்டி அல்லது டீசல் எஞ்சின் மெஷினரி தொடர்பான பிரிவை விற்பனை செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் தற்பொழுது டுகாட்டி பிராண்டு விற்பனை செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டுகாட்டி பிராண்டை ஆடி நிறுவனம் 2012 ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது, தற்பொழுது இந்த பிராண்டை விற்பனை செய்வதற்கு எவர்கோர் நிறுவனத்தைநியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டுகாட்டி பிராண்டின் மதிப்பு சுமார் €1.5 பில்லியன் விலையில் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதால் இதனை சீன நிறுவனங்கள் அல்லது இந்தியாவின் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஆஸ்டன் மார்டின் பிராண்டை 2007 ல் முதலீட்டாளர்கள் கூட்டமைப்பாக வாங்கியதை போன்றோ விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
டுகாட்டி பிராண்டை கையகப்படுத்த கவாஸாகி, ஹார்லி டேவிட்சன்,ஹோண்டா போன்ற நிறுவனங்களும் ஆர்வமாக உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் விற்பனை செய்ய உள்ள டுகாட்டி பிராண்டு பற்றி எந்த கருத்தையும் ஆடி மற்றும் எவர்கோர் நிறுவனங்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.