டிவிஎஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற அப்பாச்சி வரிசை பைக்கின் ஆர்டிஆர் 200 மாடலில் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடல் அல்லது அட்வென்ச்சர் மாடல் வரும் என்ற வதந்திகளுக்கு டிவிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அப்பாச்சி 200 அட்வென்ச்சர்
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடல் அல்லது அட்வென்ச்சர் மாடல் வரலாம் என்ற தகவலுக்கு விளக்கமளித்துள்ள டிவிஎஸ் நிறுவனம் அது போன்ற எந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான நோக்கம் தற்பொழுது இல்லை என தெரிவித்துள்ளது.
சந்தையில் அப்பாச்சி வரிசை பைக்குளில் இருவிதமான வகைகளில் கிடைக்கின்றது. அவை கார்புரேட்டர் பொருத்தப்பட்ட ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.
மற்றொன்று எஃப்ஐ பொருத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.
ஆனால் ஏபிஎஸ் மற்றும் எஃப்ஐ பொருத்தப்பட்ட மாடல்கள் இதுவரை இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கிடைக்கவில்லை. அடுத்த மாடலாக அப்பாச்சி வரிசையில் வரவுள்ள முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலான டிவிஎஸ் அப்பாச்சி RR 310S பைக் ஜூலை மாதம் வெளிவரலாம்.