டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் ஜூன் மாதந்திர விற்பனை முடிவில் 11% அதிகரிப்புடன் 18,237 எண்ணிக்கையில் உள்நாட்டு சந்தை மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் 2022-ல் 16,495 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்தது
மே 2023-ல் 19,079 எண்ணிக்கை ஒப்பீடும் பொழுது விற்பனை 4.41% குறைந்துள்ளது.
TKM Sales Report – June 2023
காலாண்டு விற்பனை நிலவரத்தை பொறுத்தவரை, Q2 CY2023 (ஏப்ரல்-ஜூன் 2023) 51,212 எண்ணிக்கை விற்பனை ஆண்டுக்கு 24% அதிகரித்துள்ளது (ஏப்ரல்-ஜூன் 2022) 41,423 அலகுகள்), மற்றும் Q1 CY2023 (ஜனவரி-2023) ஐ விட 10% வளர்ச்சி பெற்றுள்ளது.
TKM நிறுவன விற்பனை மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் துணைத் தலைவர் அதுல் சூட் கூறுகையில், “அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் இன்னோவா ஹைக்ராஸ் என இரண்டு மாடல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, எங்கள் வாடிக்கையாளர் தொடர்ந்து அதிக வரவேற்பினை வழங்கி வருகின்றனர்.
மேலும், இந்நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட், ஃபார்ச்சூனர், லெஜெண்டர், வெல்ஃபயர், க்ளான்ஸா மற்றும் ஹைலக்ஸ் பிக்கப் டிரக் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.