இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் தொடர் வீழ்ச்சியாக 24 % சரிவை டொயோட்டா கிர்லோஷ்கர் மோட்டார்ஸ் ஆகஸ்ட் 2019-ல் பதிவு செய்துள்ளது. கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 14,100 கார்களை விற்பனை செய்திருந்தது.
ஆகஸ்ட் 2019 மாதந்திர விற்பனை பற்றி டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் துணை நிர்வாக இயக்குனர் என்.ராஜா கூறுகையில், “ஆகஸ்ட் மாதத்தில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, வாடிக்கையாளர்கள் வாகனங்கள் வாங்குவதை ஒத்திவைக்கின்றனர். பெரும்பாலான மாநிலங்கள் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு தொழில்துறையின் தேவையை பாதித்துள்ளது. மேலும் எக்ஸ்சேஞ்ச் விகிதம் அதிகரித்துள்ளது.
“உள்நாட்டு விற்பனையில் சரிவை ஏற்படுத்திய தொழில்துறையின் தற்போதைய மந்தநிலை இருந்தபோதிலும், கிளான்ஸா விற்பனை சாதகமாகவே உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 14,100 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் ஆகஸ்ட் 2019-ல் 10,701 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. இது 24 சதவீத வீழ்ச்சியாகும்.