இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர்கள் விற்பனை பைக்கைவிட கூடுதலான வேகத்தில் அதிகரித்து வருகின்ற நிலையில், நவம்பர் 2017 மாதந்திர முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்கள் விபரத்தை தொடர்ந்து காணலாம்.
டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2017
ஹோண்டா நிறுவனத்தின் புதிய வரவான கிரேஸியா சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற தொடங்கியுள்ள நிலையில் கடந்த நவம்பர் 2017-ல் 17,047 அலகுகள் விற்பனை செய்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ மாடல் 42,537 அலகுகள், ஹீரோ டூயட் 22,647 அலகுகள் விற்பனை செய்துள்ளது. இதே காலகட்டத்தில் டிவிஎஸ் ஜூபிடர் 62,553 அலகுகள் மற்றும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் டாப் 10 பட்டியிலில் 2,26,046 வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது.
மோட்டார் சைக்கிள் விற்பனையில் ஹீரோ ஸ்பிளென்டர் 2,25,737 அலகுகள் விற்பனை ஆகி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ எச்எஃப் டீலக்ஸ், ஹோண்டா சிபி ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் பைக்குகள் உள்ளன.
முழுமையான விற்பனை பட்டியலை அட்டவனையில் காணலாம்
டாப் 10 பைக்குகள் – நவம்பர் 2017
வ.எண் | மாடல் | நவம்பர் -17 |
1 | ஹோண்டா ஆக்டிவா | 2,26,046 |
2 | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,25,737 |
3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,52,879 |
4 | ஹோண்டா CB ஷைன் | 82,247 |
5 | ஹீரோ கிளாமர் | 73,226 |
6 | டிவிஎஸ் XL சூப்பர் | 69,888 |
7 | டிவிஎஸ் ஜூபிடர் | 62,553 |
8 | ஹீரோ பேஸன் | 55,680 |
9 | பஜாஜ் பிளாட்டினா | 51,809 |
10 | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 49,534 |