இந்திய இரு சக்கர வாகன சந்தையில் 2017-2018 ஆம் நிதியாண்டில் முதல் 10 இடங்களை பிடித்த டாப் 10 பைக்குகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் அறிந்து கொள்ளலாம். ஆக்டிவா ஸ்கூட்டர் முதலிடத்திலும், முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாடல் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
டாப் 10 பைக்குகள் – FY2018
சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக வெளிவந்துள்ள வருடாந்திர நிதி ஆண்டின் விற்பனை அறிக்கையில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மற்றும் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு இடையில் மிக கடுமையான போட்டி நிலவி வந்தாலும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 3,154,030 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இதனை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஹீரோ ஸ்பிளென்டர் பைக் மாடல் 2,733,586 எண்ணிகையை பதிவு செய்து பட்டியிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் இடம்பெற்றுள்ளது.
டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் விற்பனை 16-17 நிதி ஆண்டைவிட சருந்துள்ள நிலையில் பட்டியிலில் 7வது இடத்தை பெற்றுள்ளது. 125சிசி சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் சிபி ஷைன் மற்றும் ஹீரோ கிளாமர் ஆகிய பைக்குகள் இடம்பெற்றுள்ளது.
முதன்முறையாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மோட்டார் சைக்கிள் மாடல் பட்டியலில் 10 வது இடத்தை கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பிரிவில் முன்னணி வகிக்கும் பல்ஸர் பட்டியிலில் 9வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
டாப் 10 இருசக்கர வாகனங்கள் பட்டியல் FY17 & FY18
மாடல் | 2016-17 | தர வரிசை | மாடல் | 2017-18 |
ஹோண்டா ஆக்டிவா | 2,759,835 | 1 | ஹோண்டா ஆக்டிவா | 3,154,030 |
ஹீரோ ஸ்பிளென்டர் | 2,550,830 | 2 | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,733,586 |
ஹீரோ HF டீலக்ஸ் | 1,408,356 | 3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,883,047 |
டிவிஎஸ் XL சூப்பர் | 890,518 | 4 | ஹோண்டா CB ஷைன் | 987,271 |
ஹீரோ பேஸன் | 870,382 | 5 | ஹீரோ பேஸன் | 930,996 |
ஹோண்டா CB ஷைன் | 777,006 | 6 | ஹீரோ கிளாமர் (Automobiletamilan) | 878,303 |
ஹீரோ கிளாமர் | 743,798 | 7 | டிவிஎஸ் XL சூப்பர் | 859,520 |
டிவிஎஸ் ஜூபிட்டர் | 613,838 | 8 | டிவிஎஸ் ஜூபிட்டர் | 810,916 |
பஜாஜ் பல்ஸர் | 582,912 | 9 | பஜாஜ் பல்ஸர் | 657,276 |
பஜாஜ் CT | 452,712 | 10 | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 555,513 |