இந்திய சந்தையில் பண்டிகை கால விற்பனை துவங்கியதால் 2020 அக்டோபர் மாத டாப் 10 ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கையில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அமோக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஹோண்டா ஆக்டிவா விற்பனை எண்ணிக்கை 2,39,570 பதிவு செய்து டாப் 10 ஸ்கூட்டர்களில் முதன்மையான ஸ்கூட்டராக விளங்குகின்றது. இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 74,159 ஆக பதிவு செய்துள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – அக்டோபர் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | அக்டோபர் 2020 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 2,39,570 |
2. | டிவிஎஸ் ஜூபிடர் | 74,159 |
3. | சுசூகி ஆக்செஸ் | 52,441 |
4. | ஹோண்டா டியோ | 44,046 |
5. | டிவிஎஸ் என்டார்க் | 31,524 |
6. | ஹீரோ டெஸ்ட்னி 125 | 26,714 |
7. | ஹீரோ பிளெஷர் | 23,392 |
8. | ஹீரோ மேஸ்ட்ரோ | 23,240 |
9. | யமஹா ரே | 15,748 |
10. | யமஹா ஃபேசினோ | 13,360 |
125சிசி சந்தை பிரிவில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 போன்றவை இடம்பெற்றுள்ளது.
web title : Top 10 selling Scooters for October 2020