கடந்த நவம்பர் 2020 மாதந்திர ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்து 2,25,822 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. ஒட்டுமொத்த இரு சக்கர வாகன சந்தையில் தொடர்ந்து ஸ்பிளெண்டர் முதலிடத்தில் இருந்து வருகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக, டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 62,626 ஆக பதிவு செய்துள்ளது. மற்றபடி 125 சிசி சந்தையில், சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் 125, யமஹா ரே, யமஹா ஃபேசினோ மற்றும் ஹீரோ டெஸ்ட்னி 125 ஆகியவை இடம்பிடித்துள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – நவம்பர் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | நவம்பர் 2020 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 2,25,822 |
2. | டிவிஎஸ் ஜூபிடர் | 62,626 |
3. | சுசூகி ஆக்செஸ் | 45,582 |
4. | ஹோண்டா டியோ | 34,812 |
5. | டிவிஎஸ் என்டார்க் | 28,987 |
6. | ஹீரோ பிளெஷர் | 19,707 |
7. | ஹீரோ டெஸ்ட்னி 125 | 15,515 |
8. | யமஹா ரே | 15,238 |
9. | ஹீரோ மேஸ்ட்ரோ | 12,412 |
10. | யமஹா ஃபேசினோ | 10,992 |