கடந்த ஏப்ரல் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக்குகள் பட்டியல் விபரம் வெளிவந்துள்ளது. இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஹீரோ ஸ்பிளென்டர் மற்றும் ஹோண்டா ஆக்டிவா மாடல்களுக்கு இடையில் முதலிடத்திற்கான கடுமையான போட்டி நிகழ்ந்து வருகின்றது.
ஆக்டிவா விற்பனை ஏப்ரல் மாதம் உயர்வு பெற்றிருக்கும் நிலையில் ஸ்பிளென்டர் பைக் மாடலிடம் முதலிடத்தை தொடர்ந்து 8வது மாதமாக இழந்துள்ளது.
டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2019
கடந்த மார்ச் மாதம் பெரும்பாலான மோட்டார்சைக்கிள் நிறுவன விற்பனை மிகப்பெரிய சரிவை கண்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் சீரான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
குறிப்பாக ஹோண்டா சிபி ஷைன் பைக் விற்பனை ஏப்ரல் மாதம் 82,315 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய மார்ச் மாத முடிவில் 29,827 பைக்குகள் மட்டும் விற்பனை செய்திருந்தது குறிப்பிடதக்கதாகும்.
டாப் 10 இரு சக்கர வாகன பட்டியலில் இரு ஸ்கூட்டர்கள் மாடல்கள் மட்டும் இடம் பெற்றுள்ளன. ஆக்டிவா ஸ்கூட்டரினை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் இடம்பெற்றுள்ளது.
வ.எண் | தயாரிப்பாளர் | ஏப்ரல் 2019 |
1. | ஹீரோ ஸ்பிளென்டர் | 2,23,532 |
2. | ஹோண்டா ஆக்டிவா | 2,10,961 |
3. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,82,029 |
4. | ஹோண்டா சிபி ஷைன் | 82,315 |
5. | பஜாஜ் பல்ஸர் | 75,589 |
6. | ஹீரோ கிளாமர் | 67,829 |
7. | பஜாஜ் பிளாட்டினா | 67,599 |
8. | டிவிஎஸ் XL சூப்பர் | 63,725 |
9. | ஹீரோ பேஸன் | 59,138 |
10. | டிவிஎஸ் ஜூபிடர் | 54,984 |