இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனையில் ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வருகின்ற நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் இருந்தாலும் மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்றது. தொடர்ந்து விற்பனையில் டாப் 10 ஸ்கூட்டர்கள் மே 2018 பட்டியலை அறிந்து கொள்ளலாம்.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018
இந்திய ஸ்கூட்டர் சந்தையில் மிகவும் ஸ்டைலிசான மாடலாக 125 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட என்டார்க் 125 ஸ்கூட்டர் அமோகமான வரவேற்பினை பெற்றதாக விளங்குகின்றது. குறிப்பாக 125சிசி சந்தையில் இளைய தலைமுறையினரை கவரும் வகையிலான அம்சங்களை பெற்றதாக என்டார்க் விளங்குகின்றது.
இந்தியாவில் பிரசத்தி பெற்ற ஹோண்டா ஆக்டிவா மாதந்திர விற்பனையில் தொடர்ந்து அபரிதமான இடத்தை பெற்றுள்ளது. கடந்த மே மாத முடிவில் 2,72,475 யூனிட்டுகள் விற்பனை ஆகி இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் என்ற பெருமைக்குரியதாக விளங்குகின்றது. இதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் 58,098 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
இதனை தொடர்ந்து சுசூகி ஆக்செஸ் 125 ஸ்கூட்டர் சந்தையில் நம்பகமான மாடலாக விளங்குகின்றது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் 46,217 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. என்டார்க் ஸ்கூட்டர் 14,695 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
ஹீரோ நிறுவனத்தின் மேஸ்ட்ரோ, டூயட், மற்றும் பிளஸர் ஆகிய மூன்று ஸ்கூட்டர்களும் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
தொடர்ந்து முழுமையான 2018 மே மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – மே 2018
வ.எண் | தயாரிப்பாளர் | மே -2018 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 272,475 |
2 | டிவிஎஸ் ஜூபிடர் | 58,098 |
3. | சுசூகி ஆக்செஸ் | 46,217 |
4. | ஹோண்டா டியோ | 32,899 |
5. | ஹீரோ மேஸ்ட்ரோ | 23,509 |
6. | ஹீரோ டூயட் | 19,741 |
7. | யமஹா ஃபேசினோ | 15,132 |
8. | டிவிஎஸ் என்டார்க் | 14,695 |
9. | ஹீரோ பிளஸர் | 12,148 |
10. | ஹோண்டா கிரேசியா | 12,068 |