கடந்த 2018 ஆம் ஆண்டின் முடிவில் முதல் 10 இடங்களை பிடித்த மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர் பட்டியலை, டாப் 10 டூ வீலர் தொகுப்பில் காணலாம். முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் 78,24,067 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
டாப் 10 டூவீலர் நிறுவனங்கள்
இரு சக்கர வாகன காப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தாலும், இரு சக்கர வாகன வளர்ச்சி சீரான வளர்ச்சி பெற்று முந்தைய 2017 ஆம் வருடத்தை விட 12.8 சதவீதம் வளர்ச்சி பெற்று 2,16,45,169 இரு சக்கர வாகனங்கள் 2018 ஆம் வருடத்தில் விற்பனை ஆகியுள்ளது. முந்தைய 2017-ல் மொத்தமாக 1,91,82,688 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பாளராக விளங்கி வருகின்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மொத்தமாக 78 லட்சம் வாகனங்களை விற்பனை செய்து முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டின் மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையில் 36.2 சதவீதம் பங்களிப்பை பெற்று உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், 58 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 7.85 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், நடுத்தர மோட்டார் சைக்கிள் பிரிவில் மிகப்பெரிய மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்குகின்றது. 2018 ஆம் ஆண்டில் 8,37,669 யூனிட்டுகளை விற்றுள்ளது.
சுஸூகி டூ வீலர் நிறுவனம் மற்ற இரு சக்கர வாகன நிறுவனங்களை விட மிக சிறப்பன வளர்ச்சி கண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டை விட 2018-ல் 35.18 சதவீத வளர்ச்சி பெற்று 6,27,991 யூனிட்டுகளை விற்றுள்ளது.
டாப் 10 டூ வீலர் நிறுவனங்கள் – 2018
வரிசை | தயாரிப்பாளர்கள் | CY 2018 | CY2017 | வளர்ச்சி % |
1 | ஹீரோ மோட்டோ கார்ப் | 7824067 | 7023363 | 11.40% |
2 | ஹோண்டா | 5884911 | 5456364 | 7.85% |
3 | டிவிஎஸ் மோட்டார் | 3151097 | 2714662 | 16% |
4 | பஜாஜ் ஆட்டோ | 2428813 | 1890529 | 28.47% |
5 | ராயல் என்ஃபீல்ட் | 837669 | 752880 | 11% |
6 | யமஹா இந்தியா | 796234 | 786787 | 1% |
7 | சுஸூகி டூ வீலர் | 627991 | 464551 | 35.18% |
8 | பியாஜியோ | 79629 | 63342 | 25% |
9 | மஹிந்திரா | 5197 | 18404 | -71% |
10 | ஹார்லி டேவிட்சன் | 3148 | 3339 | -6% |
மேலும் படிக்க ;- இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள் – 2018
ஆட்டோமொபைல் தமிழனில் தொடர்ந்து பைக் செய்திகள் மற்றும் கார் செய்திகள் படிக்கலாம். மேலும் எமது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.