டூ வீலர் மற்றும் கார்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை ஜூன் 16 முதல் இந்தியா காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் (ஐஆர்டிஏஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
2019-2020 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை 21 சதவீதம் உயர்த்துவதனை அறிவித்திருந்த நிலையில், தற்போது விலை உயர்வை ஜூன் 16 முதல் செயற்படுத்த உள்ளது.
மூன்றாம் நபர் காப்பீடு
Insurance Regulatory and Development Authority of India (IRDAI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 1000சிசி குறைந்த கார்களின் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் 12 சதவீதம் அல்லது ரூ.2072 வரை உயர்த்தப்பட உள்ளது. முன்பாக ரூ.1850 கட்டணமாக இருந்தது.
1000சிசிக்கு மேற்பட்ட 1500சிசி க்கு குறைந்த திறன் பெற்ற கார்களில் 12.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு ரூ.3,221 ஆகும். 1500சிசி க்கு கூடுதலான என்ஜின் பெற்ற கார்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ரூ.7,890 ஆக உள்ளது.
இரு சக்கர வாகனங்கள்
இரு சக்கர வாகனங்களிலும் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 16 முதல் ரூ.482 வரை அல்லது 12.88 சதவீதம் வரை 75சிசி -க்கு குறைந்த டூவீலர்களுக்கு மட்டும் பொருந்தும். 75-150சிசி வரையிலான மாடல்களுக்கு ரூ. 752 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
150-350சிசி வரையிலான பைக்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் ரூ. 1,193 அல்லது 21.11 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. முன்பாக ரூ. 985 ஆக இருந்தது. 350சிசி-க்கு கூடுதலான பைக்குகளுக்கு தற்போது உள்ள ரூ.2323 பிரீமியம் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
அடுத்தப்படியாக எலெக்ட்ரிக் டூ வீலர்களின் பிரிமீயம் கட்டணும் உயர்த்தபட்டுள்ளது. குறிப்பாக 3kW -க்கு குறைவாக உள்ள வாகனங்களுக்கு ரூ.410 , 3kW முதல் 7kW வரை மூன்றாம் நபர் கட்டணம் ரூ.639, 7kW முதல் 16kW வரை உள்ள எலக்ட்ரிக் டூ வீலர் வாகனங்களுக்கு ரூ.1014 வரையும், 16KW க்கு மேற்பட்ட அனைத்து மின் இரு சக்கர வாகனங்களுக்கும் ரூ.1975 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று சக்கர வாகனங்களுக்கு எவ்விதமான கட்டணமும் உயர்த்தவில்லை. ஆனால் பள்ளி பேருந்துகள், பொது போக்குவரத்து மற்றும் தனிநபர் சரக்கு வாகனங்களுக்கு மூன்றாம் நபர் வாகன காப்பீடு உயர்த்தப்பட உள்ளது. வரும் ஜூன் 16 முதல் உயர்த்தப்பட உள்ளது.