எலக்டரிக் கார் தயாரிப்பில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், இந்திய சந்தையில் தனது மாடல்களை விற்பனை செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதனை உறுதி செய்யும் வகையில் மும்பையில் டீலருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டிருக்கின்றது.
மும்பைக்கு மட்டும் முதற்கட்டமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் டெஸ்லாவின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் வகையிலான டீலரை துவங்கி முதற்கட்டமாக CBU முறையில் கார்களை இறக்குமதி செய்து விற்பனைக்கு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் எப்பொழுது விற்பனையை துவங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் இந்திய சந்தைக்கு டெஸ்லா கார்களை எதிர்பார்க்கலாம்.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை எலான் மஸ்க் சந்தித்த பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியிருக்கின்றது. குறிப்பாக, அமரிக்காவில் டிரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டு வருகின்ற நிலையில், டெஸ்லாவின் எலான் மஸ்க் தொடர்ந்து வரிகளை குறைக்க வேண்டும் என முன்பே பலமுறை இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.
குறிப்பாக, தற்பொழுது டெஸ்லா நிறுவனம் Model Y, Model X , சைபர்டிரக் உட்பட Model 3 மற்றும் Model S போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்நிறுவனத்துக்கு போட்டியாக இந்திய சந்தையில் பிஓய்டி உட்பட பல்வேறு பீரிமியம் கார் நிறுவனங்கள் உள்ளன.