இம்பேக்ட் டிசைன் அடிப்படையில் உருவான டாடா டியாகோ, டிகோர், ஹெக்ஸா மற்றும் டாடா நெக்ஸான் உட்பட அனைத்து கார்களும் ரூ.25,000 வரை விலை உயர்த்த உள்ளதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது.
டாடா கார்கள் விலை
இந்தியாவின் பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் தங்களுடைய வாகனங்களின் விலையை கனிசமாக உயர்த்த தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் மாருதி சுசூக்கி , டொயோட்டா,ஸ்கோடா, ஃபியட் கிறைஸலர் போன்ற நிறுவனங்களும் உள்ளது.
விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாறி வரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்பவும், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வை தொடர்ந்து கார்கள் மற்றும் எஸ்யூவி விலையை உயர்த்துவதாக குறிப்பிட்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்திய டியாகோ , டீகோர் மற்றும் காம்பேக்ட் ரக நெக்ஸான் எஸ்யூவி போன்றவை அபரிதமான வளர்ச்சியை எட்டி வருவதனால் ஒட்டுமொத்த கார் விற்பனையில் டாடா நிறுவனம் மஹேந்திரா நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள விலை உயர்வு ஜனவரி 1, 2018 முதல் அமலுக்கு வருகின்றது.