2010 ஆம் ஆண்டு ஒற்றை மாடல் டாடா நானோ காரின் மூலம் உற்பத்தி துவங்கப்பட்ட குஜராத் சனந்த் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் வெற்றிகரமாக 10 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.
பிரசத்தி பெற்ற நானோ காருக்கு மட்டும் பிரத்தியேகமாக துவங்கப்பட்ட தொழிற்சாலை தற்பொழுது டிகோர், டியாகோ மாடல்களின் பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன.
தற்பொழுது டியாகோ, டியாகோ AMT, டியாகோ EV, டியாகோ iCNG, டிகோர், டிகோர் AMT, டிகோர் EV, டிகோர் iCNG மற்றும் XPRES-T EV ஆகிய மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
டாடா மோட்டார்ஸ் சனந்த் தொழிற்சாலை 1100 ஏக்கரில் 741 ஏக்கர் (ஆலை) மற்றும் 359 ஏக்கர் (விற்பனையாளர் பூங்கா) என பரந்து விரிந்துள்ளது.
சுமார் 6000 நேரடி மற்றும் மறைமுக ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. பல்வேறு அதிநவீன வசதியை சனந்த் ஆலை இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆலையில் பிரஸ் லைன், வெல்ட் ஷாப், பெயிண்ட் ஷாப், அசெம்பிளி லைன் மற்றும் பவர்டிரெய்ன் ஷாப் ஆகிய பிரிவுகளை கொண்டுள்ளது.
உற்பத்தி இலக்கை பற்றி டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிர்வாக இயக்குனர் ஷைலேஷ் சந்திரா, பேசுகையில், எங்கள் சனந்த் ஆலையின் மூலமாக 1 மில்லியன் காரை தயாரிப்பு இலக்கினை கடந்துள்ளதை நாங்கள் மிகவும் பெருமையாக கருதுகின்றோம்.
உயர் தர கட்டுமானத்தை கொண்டுள்ள வாகனங்களின் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.
மேலும் எதிர்கால வாகனங்களான மின்சார வாகனத் துறையில் தீர்வுகளை வழங்குவதில் எங்கள் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை சுமார் 2% வரை ஏப்ரல் 1, 2024 முதல் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
கூடுதலாக சில நாட்களுக்கு முன்பாக ஸ்பெஷல் டார்க் எடிசன் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டது.