Auto Industry டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் விலை உயர்ந்தது Last updated: 9,January 2020 7:54 am IST MR.Durai Share tata harrier dark editionடாடா மோட்டார்ஸ் தனது ஹாரியர், நெக்ஸான், டியாகோ, டிகோர் மற்றும் ஹெக்ஸா போன்ற மாடல்களின் விலையை அதிகபட்சமாக ரூபாய் 55,000 வரை விலையை உயர்த்தியுள்ளது. விலை உயர்வு குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை.பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் தங்கள் வாகனங்களின் விலை ஜனவரி முதல் வாரத்தில் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பிஎஸ் 4 மாடல் தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பிப்ரவரி முதல் மேலும் உயர்த்தலாம்.ஹாரியர் விற்பனைக்கு வெளியாகி முதல் வருடத்தை கடந்துள்ள நிலையில், மொத்தமாக 15,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது டாடாவின் ஹாரியர் எஸ்யூவி ஆரம்ப விலை ரூ.13.44 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக டாப் வேரியண்ட் ரூ.17.31 லட்சம் வரை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியிடப்பட உள்ள நிலையில், தற்போது கிடைக்கின்ற மாடலின் ஆரம்ப விலை ரூ.6.73 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.11.10 லட்சம் வரை கிடைக்கின்றது. ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை விலை உயர்ந்துள்ளது.டியோகோ காரின் விலை ரூ.9,000 முதல் ரூ.20,000 வரை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.4.55 லட்சம் துவங்கிய அதிகபட்சமாக ரூ.6.97 லட்சம் வரை கிடைக்கின்றது.டாடா டிகோர் விலை ரூ.5.65 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.8.10 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்டுள்ளது.டாடாவின் ஹெக்ஸா காரின் விலை ரூ.13.70 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.19.28 லட்சம் வரை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விலை அதிகபட்சமாக ரூ.44,000 வரை உயர்ந்துள்ளது. Share This Article Facebook Previous Article ஸ்கோடா விஷன் IN எஸ்யூவி மாதிரிப்படம் வெளியானது – ஆட்டோ எக்ஸ்போ 2020 Next Article 120 கிமீ ரேஞ்சு.., ரூ.9 லட்சத்தில் மஹிந்திரா eKUV 100 எலக்ட்ரிக் கார் வருகையா..