இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், முன்னணி சார்ஜிங் ஆப்ரேட்டர் நிறுவனங்களான சார்ஜ் ஜோன், கிளைடா, ஸ்டேடிக் மற்றும் ஜியோன் சார்ஜிங் ஆகிய நான்கு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மூலம் நாட்டின் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்கள் (CPO) Chargezone, Glida, Statiq மற்றும் Zeon ஆகியவை முக்கிய நகரங்களில் கிட்டத்தட்ட 2,000 சார்ஜிங் நிலையங்களை பெற்றுள்ளது.
Tata Motors EV
முக்கிய நகரங்களில் சுமார் 2,000 சார்ஜிங் மையங்களை கொண்டுள்ள நிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 12 முதல் 15 மாதங்களில் 10,000 கூடுதல் சார்ஜிங் நிலையங்களை விரிவுப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்திய சாலைகளில் சுமார் 1.15 லட்சத்துக்கும் அதிகமான டாடா EV வாகனங்கள் இயங்கும் நிலையில் இந்த வளமையான நெட்வொர்க்கை பயன்படுத்தக் கொள்ள உள்ளது.
டாடா பவர் மூலம் பல்வேறு முக்கிய நகரங்களில் சார்ஜிங் நிலையங்களை கட்டமைத்து கொண்டுள்ளது. TPEM (Tata Passenger Electric Mobility) மற்றும் BPCL உடன் இணைந்து வரும் ஆண்டில் 7,000 சார்ஜர்களை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஆண்டுகளில் பஞ்ச் எலக்ட்ரிக், கர்வ் எலக்ட்ரிக் மற்றும் ஹாரியர் இவி , சஃபாரி இவி ஆகியவை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.