இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், கடந்த ஜனவரி மாதம் வர்த்தக வாகன மற்றும் பயணியர் வாகனம் என இரு பிரிவுகளில் மொத்தம் 43 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
டாடா மோட்டார்ஸ் விற்பனை நிலவரம்
கடந்த வருடம் ஜனவரி 2017-யில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகன மற்றும் பயணியர் வாகனம் என இரு பிரிவுகளில் மொத்தமாக 41,428 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில், கடந்ந மாதம் ஜனவரி முடிவில், 59,441 அலகுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 43 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
வர்த்தக வாகன பிரிவு
கட்டுமானம்,லாஜிஸ்டிக்ஸ் மற்றும் உற்பத்தி துறை சார்ந்த சேவைகளின் பயன்பாடு அதிகரிப்பின் காரணமாக இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவு 38 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜனவரி 2017யில் 28,521 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் , ஜனவரி 2018யில் 39,386 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் வர்த்தக வாகன ஏற்றுமதி 5 சதவீதம் அதிகரித்து 4900 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
பயணிகள் வாகன பிரிவு
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனையில் மிக வேகமான வளர்ச்சியை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் டியாகோ, டிகோர், ஹெக்ஸா, நெக்ஸான் எஸ்யூவி போன்ற மாடல்களுக்கு அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குவதனால், கடந்த ஜனவரி 2017 மாதத்துடன் ஒப்பீடுகையில் 55 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.
ஜனவரி 2017யில் 12,907 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் , ஜனவரி 2018யில் 20,055 அலகுகள் விற்பனை ஆகியுள்ளது. மேலும் டாடா மோட்டார்சின் யுட்டிலிடி சந்தை 188 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.