ஸ்டைலிஷான எம்பிவி ரக மாடலாக விளங்கும் டாடா ஹெக்ஸா காரை தொடர்ந்து பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணையாக தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் சேவை அதிகாரி SN பார்மன் அளித்த பேட்டியில் தெரிய வந்துள்ளது.
SN பார்மன் சமீபத்தில் தி இந்து பிசினஸ்லைன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிஎஸ் 6-க்கு தேவையான தொழில்நுட்பத்துடன் தயாராக உள்ளது. இந்நிலையில் பிஎஸ்-6 மாற்றத்திற்கு ஹெக்ஸா தயாராக உள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு வரவுள்ள 7 இருக்கை கொண்ட ஹேரியர் அடிப்படையிலான பஸ்ஸார்டு எஸ்யூவி ஆனது ஹெக்ஸா எம்பிவி ரக மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ளது. எனினும் குறைந்த விலையில் 7 இருக்கை கொண்ட மாடலை விரும்புவோர்க்கு தொடர்ந்து ஹெக்ஸா விற்பனை செய்யப்படும் என உறுதிப்படுத்தப்படுள்ளது.
சில நாட்களாக ஹெக்ஸா கார் நீக்கப்படலாம் என வெளியான தகவல்களுக்கு விடையளிக்கும் வந்துள்ள பேட்டியின் மூலம் ஹெக்ஸா தொடர்ந்து விற்பனை செய்ப்படுவது உறுதியாகியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 1.5 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின் மாடல்களை பிஎஸ் 6 நடைமுறைக்கு மேம்படுத்துவதில்லை என முன்பே அறிவித்துள்ளது.