இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் சுசூகி மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் , 36.59 சதவீத வளர்ச்சியை மே மாத விற்பனையில் பதிவு செய்து 53, 167 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. சமீபத்தில் ஜிக்ஸர் ஏபிஎஸ் பிரேக் பெற்ற மாடல் விற்பனைக்கு வந்தது.
சுசூகி மோட்டார்சைக்கிள்
ஸ்கூட்டர் மற்றும் பைக் என இரண்டிலும் சீரான வளர்ச்சி மற்றும் தொடர் விற்பனை உயர்வினை கண்டு வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம். 2018-2019 நிதி ஆண்டில் 7 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்ணயம் செய்துள்ளது.
கடந்த மே மாதம் 2018யில் 53,167 வாகனங்ளை உள்நாட்டில் விற்பனை செய்துள்ள நிலையில் முந்தைய வருடம் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 39.59 சதவீத வளர்ச்சி அதாவது மே 2017யில் 38,923 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. மேலும் ஏற்றுமதி சந்தை மற்றும் உள்நாடு என மொத்தமாக மே 2018யில் 58,682 யூனிட்டுகள், மே 2017யில் 44,123 விற்பனை செய்திருந்தது.
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுருந்த நேக்டு ஸ்டீரிட் ரக மாடலான சுசூகி GSX-S750 விலை ரூ. 7.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக இந்தியாவின் குறைந்த விலை ஏபிஎஸ் பெற்ற மாடலாக சுசூகி ஜிக்ஸர் விற்பனைக்கு வந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் வெளியான சுசூகி பர்க்மென் ஸ்டீரிட் 125 ஸ்கூட்டர் வெளியாக உள்ளது.