இந்த வருடம் 7 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நோக்கில் பயணித்து வரும் சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம், ஜூன் 2018 மாதந்திர விற்பனையில் 46,717 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
தொடர்ந்து இந்திய சந்தையில் சுசூகி நிறுவனம் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிக்ஸர், ஆக்செஸ் போன்ற மாடல்கள் இந்நிறுஉவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. கடந்த ஜூன் 2017 யில் 33,573 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 46,717 யூனிட்டுகளை விற்பனை செய்து 39 சதவீத வளர்ச்சி உள்நாட்டில் பெற்று விளங்குகின்றது.
7 இலட்சம் இலக்கை நோக்கி பயணிக்கின்ற இந்நிறுவனம் , விரைவில் இளைய தலைமுறையினர் கவரும் வகையிலான ஸ்கூட்டர் மாலாக விளங்க உள்ள சுசூகி பர்க்மென் ஸ்ட்ரீட் 125 ஸ்கூட்டர் ஜூலை 19ந் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த ஸ்கூட்டர் மிக சிறப்பான விலை மற்றும் பல்வேறு நவீன அம்சங்களுடன் ஸ்டைலிஷாக ரூ. 75,000 எக்ஸ்-ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.