ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவை தொடர்ந்து சர்வதேச அளவில் தொடங்குகின்ற முதல் தொழிற்சாலை தாய்லாந்து நாட்டில் அமைய உள்ளது. இந்த ஆலை உற்பத்தி ஜூன் 2019-ல் தொடங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான ராயல் என்ஃபீல்டு 650 ட்வீன்ஸ் , மிகப்பெரிய வரவேற்பினை தாய்லாந்து நாட்டில் பெற்றுள்ளது. குறிப்பாக இந்த நாட்டில் சுமார் 700 முன்பதிவுகள் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக்குகளுக்கு கிடைத்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை
முழுமையாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு சொந்தமாக தொடங்கப்பட உள்ள இந்த ஆலையில், பைக்குகள் (CKD) ஒருங்கிணைக்கப்பட உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாங்காக் நகரில் முதன்முறையாக என்ஃபீல்டு நிறுவனத்தின் டீலர் தொங்கப்பட்டது. மேலும் கூடுதலாக 15 டீலர்களையும், வரும் மார்ச் 2020க்குள் 25க்கு மேற்பட்ட சர்வீஸ் மையங்களை திறக்க என்ஃபீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியா சந்தையில் முதன்முதலாக ராயல் என்ஃபீல்டு 650 ட்வீனஸ் தாய்லாந்து நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வரை இங்கு 700க்கு அதிகமான முன்பதிவுகள் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 பைக் மாடல்களுக்கு கிடைத்துள்ளதாக என்ஃபீல்டு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் தாய்லாந்து நாட்டில் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாடர்ன் கிளாசிக் நடுத்தர ரக மோட்டார்சைக்கிள் விருதினை இன்டர்செப்டார் 650 பைக் பெற்றுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து நாடுகளை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய சந்தையாக தாய்லாந்து விளங்குகின்றது. இதற்கு காரணம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நடுத்தர ரக மோடார்சைக்கிள் மாடலான 650 ட்வீன்ஸ் பைக்குகளுக்கு இந்நாட்டில் கிடைத்துள்ள வரவேற்பே காரணமாகும். மிகப்பெரிய கம்யூட்டர் சமூகத்தினர், அடுத்த மேம்பாடாக இருக்க உள்ள பைக் மாடலாகவும் , நீண்ட தொலைவு பயணத்திற்கு ஏற்ற மாடலாகவும் என்ஃபீல்டு விளங்க உள்ளது. மேலும் எங்களுடைய தாய்லாந்து சந்தைக்கான உள்நாட்டு உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர்களுடன் மிக அருகாமையில் எங்களை வைத்திருக்க உதவும் என ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரி சித்தார்த் லால் குறிப்பிட்டுள்ளார்.