உலகின் மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனங்களின் ஒன்றான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 2017 மார்ச் மாத முடிவில் 60,113 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 16-17ல் 60 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
ராயல் என்ஃபீல்டு விற்பனை
சென்னையைச் சேர்ந்த ராயல் என்ஃபீலடு மோட்டார் சைக்கிள் விற்பனை அபரிதமான வளர்ச்சியை கடந்த சில மாதங்களாகவே பதிவு செய்து வருகின்றது. கடந்த மாதம் ஏற்றுமதி உள்பட 60,113 அலகுகளை விற்பனை செய்துள்ள என்ஃபீல்டு கடந்த ஆண்டின் இதே மாத்ததில் 51,320 அலகுகள் விற்பனை செய்திருந்ததுடன் ஒப்பீடுகையில் கூடுதலாக 17 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
உள்நாடு மற்றும் ஏற்றுமதி உள்பட கடந்த 16-17 நிதி ஆண்டில் சுமார் 31 சதவீத கூடுதல் வளர்ச்சியை பதிவு செய்து 666,490 அலகுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
விபரம் | மார்ச் 2017 | மார்ச் 2016 | வளர்ச்சி |
---|---|---|---|
உள்நாடு | 58,549 | 50,059 | 17% |
ஏற்றுமதி | 1,564 | 1,261 | 24% |
மொத்தம் | 60,113 | 51,320 | 17% |