இங்கிலாந்தில் பிறந்த இந்தியாவில் வளரும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், கடந்த மே மாதந்திர விற்பனை முடிவில் 74,697 யூனிட்டுகளை விற்பனை செய்து 23 சதவித வளர்ச்சியை முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 250சிசி-500சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் முன்னணி நிறுனமாக என்ஃபீல்டு விளங்குகின்றது.
ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்
என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை இந்தியா மட்டுமல்லாமல் ஏற்றுமதி சந்தையிலும் மிக சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 350சிசி வரிசையில் உள்ள கிளாசிக் 350 அதிகப்படியான சந்தை மதிப்பை பெற்று விளங்குகின்றது. இதனை தொடர்ந்து புல்லட், புல்லட் எலக்ட்ரா, தண்டர்பேர்டு 350 ஆகிய மாடல்கள் சிறப்பான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது.
என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சி கண்டு வரும் நிலையில், 2018 மே மாதந்திர விற்பனையில் 74,697 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2017 மே மாதத்தில் 60,696 யூனிட்டுகள் விற்பனை செய்திருந்தது. உள்நாட்டில் மே 2018யில் 72,510 யூனிட்டுகள விற்பனை செயப்பட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் ஏற்றுமதி சந்தையில் 2187 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனத்தின் தண்டர்பேர்டு எக்ஸ் வரிசை எனப்படும் புதிய ரக மாடல்கள் அபரிதமான வளர்ச்சி பெற்ற நிலையில், சர்வதேச அளவில் 1000 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள கிளாசிக் 500 பெகாசஸ் ஸ்பெஷல் எடிசன் மாடல் 250 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. மீதமுள்ள 750 யூனிட்டுகளில் 190 மாடல்கள் இங்கிலாந்து மற்றவை அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.