வோல்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற டுகாட்டி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்க இந்தியாவின் ஐஷர் குழுமத்தின் அங்கமான ராயல் என்ஃபீலடு ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இத்தாலியின் பிரசத்தி பெற்ற டுகாட்டி நிறுவனத்தை வாங்க ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் லாபகரமாக செயல்படுகின்ற நிறுவனங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடுத்தர ரக பிரிவான 300சிசி சந்தையில் மிக சிறப்பான பங்களிப்பினை சர்வதேச அளவில் பெற்று விளங்குகின்றது.
கடந்த 2016 ஆண்டின் முடிவில் டுகாட்டி நிறுவனம், 55 ஆயிரம் மோட்டார் சைக்கிள்களை 593 மில்லியன் யூரோ (ரூ.4000 கோடி) மதிப்பில் விற்பனை செய்துள்ளதின் அடிப்படையில் 100 மில்லியன் யூரோ (ரூ.700 கோடி ) வருமானத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே டுகாட்டி நிறுவனத்தை வோக்ஸ்வேகன் 1.5 பில்லியன் யூரோ (ரூ.10,500 கோடி) மதிப்பில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்க ஹீரோ, ஹோண்டா, சுசுகி மற்றும் ராயல் என்ஃபீலடு போன்ற நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் ஹீரோ நிறுவனமும் டுகாட்டி நிறுவனத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.