உலகின் நடுத்தர மோட்டார் சைக்கிள் (250cc-750cc) சந்தையில் முதன்மையாக உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் குறைந்த விலை ரோட்ஸ்டெர் மாடலாக அறியப்படுகின்ற ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்ட குறைவான காலத்திலே 5 லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 2022ல் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹண்டர் 350 தொடர்ந்து அமோகமான ஆதரவினை இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளிலும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகின்றது. குறிப்பாக ஆசியா-பசுபிக் பிராந்தியம், ஐரோப்பா, வட அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் பிரபலமாக உள்ளது.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், ராயல் என்ஃபீல்டின் தலைமை வணிக அதிகாரி யத்விந்தர் சிங் குலேரியா கூறுகையில், “நகர்ப்புற மற்றும் துடிப்பான சூழல்களில் சவாரி செய்வதன் அர்த்தத்தை ஹண்டர் 350 உண்மையிலேயே மறுவரையறை செய்துள்ளது. மிக குறுகிய காலத்தில் 500,000 விற்பனை மைல்கல்லை எட்டுவது, ஹண்டர் 350 மீதான எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அபரிமிதமான அன்பு மற்றும் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
ஹண்டர் 350 ஆர்வமுள்ள ரைடர்களின் வளர்ந்து வரும் துடிப்பான சமூகம், நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவில் இதை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு, சுய வெளிப்பாடு மற்றும் சவாரி செய்வதில் மகிழ்ச்சியை ஊக்குவிக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்குவதில் எங்களை தொடர்ந்து ஊக்குவிக்கும் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்.
ஹண்டர் 350 வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து சவாரிகளை நடத்தி ராயல் என்ஃபீல்ட் இந்த மைல்கல்லை கொண்டாடும், மேலும் சவாரி செய்வதற்கும் ப்யூர் மோட்டார்சைக்கிளிங் அனுபவத்தை பெறுவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்.! என குறிப்பிட்டுள்ளார்.
புதுமையான, ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களை வழங்கும் ராயல் என்ஃபீல்டின் நோக்கத்திற்கு ஒரு சான்றாகும். இந்தியாவில், பெருநகரங்களைத் தவிர, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட சந்தைகளிலும் ஹண்டர் 350 வேகமாக விற்பனை ஆகி வருகின்றது.