ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக மாடலாக விளங்கும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் மாடலை அமெரிக்காவில் சந்தையில் விற்பனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்
அமெரிக்கா சந்தையில் சோதனைக்காக சில குறப்பிட்ட எண்ணிக்கையில் அனுப்பியுள்ள ஹிமாலயன் பைக்குகள் சிறப்பான பயண அனுபவத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கை கிடைத்துள்ள நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான முயற்சியை இந்நிறுவனம் தொடங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு மாடல்கள் சிறப்பான வளர்ச்சியை பெற்று வரும் நிலையில், அமெரிக்காவில் அட்வென்ச்சர் ரக மாடலை களமிறக்குவதற்கு அனுமதி சான்றிதழுக்கு விண்ணிப்பித்துள்ளாதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவில் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. புதிய FI பொருத்தப்பட்ட ஹிமாலயன் பைக்கில் 24.5 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 411சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 32 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்சினை பெற்றுள்ளது. இந்தியாவில் பிஎஸ் 4 மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.