ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை கடந்த சில மாதங்களாக கடுமையான சரிவினை சந்தித்து வந்த நிலையில் பண்டிகை காலம் மற்றும் சர்வதேச ஏற்றுமதி அதிகரித்ததை தொடர்ந்து 70,451 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டும் 67,538 யூனிட்டுகளும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் 70,000 பைக்குகளை டெலிவரி செய்திருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடுகையில் 4 % வீழ்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளது.
தனது மூன்று ஆண்டுகால விற்பனையில் 50,000 விற்பனை இலக்கை குறையாமல் பதிவு செய்து வந்த என்ஃபீல்டு கடந்த ஜூலை மாதம் விற்பனையில் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டது. ஆனால் ஏற்றுமதி சந்தை மட்டும் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபருடன் ஒப்பீடுகையில் 987 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபரில் 4,426 யூனிட்டுகளை விற்றுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 407 யூனிட்டுகளை மட்டும் ஏற்றுமதி செய்திருந்தது.
ஏற்றுமதி சந்தைகளில் ராயல் என்ஃபீல்டின் விற்பனை அதிகரிக்க கடந்த ஆண்டு புதிய 650 ட்வீன்ஸ் என அறிமுகப்படுத்திய ராயல் என்ஃபீல்ட் இன்டர்செப்டர் 650, மற்றும் ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவை ராயல் என்ஃபீல்ட் நடுத்தர அளவிலான உலகளாவிய மோட்டார் சைக்கிள் சந்தையில் ஒரு தலைவராக தொடருவதற்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த மாத இறுதியில், ராயல் என்ஃபீல்ட் தனது வருடாந்திர மோட்டார் சைக்கிள் திருவிழாவான ரைடர் மேனியாவை நவம்பர் 22-24 வரை கோவாவில் நடத்துகிறது. ரைடர் மேனியா 2019 க்கு ஏற்கனவே 8,000 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் பதிவு செய்துள்ளனர்.