ஆடம்பர கார் பிரியர்களின் உயர் ரக பிராண்டான ரோல்ஸ் ராய்ஸ் கார் வரலாற்றில் 116 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக 5,152 யூனிட்டுகளை 2019 ஆம் ஆண்டில் விற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-யை விட (4017 யூனிட்) 25 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 50 நாடுகளில் உள்ள 135 டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தொடர்ந்து அதிக வரவேற்பினை பாண்டம் கார் தொடர்ந்து பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து டான் மற்றும் ரயீத் கார்களும் உள்ளன. புதிய அறிமுகமான எஸ்யூவி மாடலான கல்லினன் காருக்கும் அமோகமான வரவேற்பு உள்ளது.
இந்நிறுவன கார் விற்பனை சந்தையைப் பொறுத்த வரை வட அமெரிக்கா முதலிடத்திலும் (உலகளாவிய விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு) சீனா மற்றும் ஐரோப்பா (இங்கிலாந்து உட்பட) ரஷ்யா, சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, கத்தார் மற்றும் கொரியா ஆகியவை அடங்கும். இந்தியாவிலும் பரவலாக ரோல்ஸ்-ராய்ஸ் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.