Auto Industry இந்தியாவில் பெட்ரோல் டூ வீலர்களை தடை செய்ய அரசு முடிவு! Last updated: 24,May 2019 4:38 pm IST MR.Durai Share டிவிஎஸ் ஸ்கூட்டி பெப்+நிதி அயோக் பரிந்துரையின்படி, 150சிசிக்கு குறைந்த திறன் பெற்ற டூ வீலர் விற்பனையை 2025 ஆம் ஆண்டு முதல் தடை செய்ய இந்திய அரசு திட்டமிட்டு வருகின்றது. இந்த பிரிவில் எலெக்ட்ரிக் டூ வீலர்களை மட்டும் விற்பனை செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள India’s think tank என்ற அறிக்கையில், 2023 ஆம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்களும், 2025 முதல் 150 சிசிக்கு குறைந்த பெட்ரோல் மாடல்களை தடை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.பெட்ரோல் டூ வீலர் தடைகடந்த 2018-2019 ஆம் நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்டுள்ள பெட்ரோலில் இயங்கும் இரு சக்கர வாகன எண்ணிக்கை 2.1 கோடியாகும். ஆனால் இதே காலகட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டரின் மொத்த விற்பனை வெறும் 1,26,000 மட்டும் ஆகும். ஆனால் இதற்கு முந்தைய நிதியாண்டு 17-2018 காலத்தில் 54,800 மட்டும் விற்பனை ஆகியிருந்தது.தற்போது இந்தியாவில் ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர், ஓகினாவா போன்ற முன்னணி மின்சார இரு சக்கர வாகன நிறுவனங்களு FAME II ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட்டுள்ளது.நிதி அயோக் பரிந்துரைப்படி, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசினை கட்டுப்படுத்த பெட்ரோல் இரு சக்கர வாகனங்களில் 150சிசி க்கு குறைந்த திறன் பெற்ற பைக் மற்றும் ஸ்கூட்டர்களை 2025 முதல் முற்றிலும் விற்பனை நிறுத்தப்படுவதுடன், இதற்கு மாற்றாக எலெக்ட்ரிக் டூ வீலர்களை நிலைநிறுத்தவும், 2023 முதல் மூன்று சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில் பெட்ரோல் வாகன விற்பனை எண்ணிக்கை கட்டுப்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். Share This Article Facebook Previous Article புதிய சுஸுகி ஜிக்ஸர் SF மாடலுக்கு 6 கூடுதல் ஆக்செரீஸ்கள் அறிமுகம் Next Article மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா ஸ்போர்ட் எடிஷன் அறிமுகம்