இந்தியாவில் செயல்படும் நிசான் மற்றும் பட்ஜெட் ரக பிராண்டான டட்சன் கோ, கோ பிளஸ் கார்கள் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றது. இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்கள் விலை உயர்வினை ஏப்ரல் முதல் அமல்படுத்த உள்ளன.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, ரெனோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் கவாஸாகி பைக் நிறுவனமும் விலை அதிகரித்திருந்தது. மேலும் சில நிறுவனங்கள் விலையை உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
டட்சன் கார்களின் விலை உயர்வு
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தித்தாள் அறிவிப்பில் , மாறி வரும் சந்தையின் நிலவரம், அதிகரித்து வரும் மூலப்பொருட்களின் விலை காரணமாக விலை உயர்வினை தவிரக்க இயலவில்லை என குறிப்பிட்டுள்ளது.
டட்சன் கோ மற்றும் கோ பிளஸ் கார்களின் விலையும் அதிகபட்சாக 4 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றது.
சமீபத்தில் மேம்பட்ட வசதிகளை பெற்ற டட்சன் ரெடி கோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அடிப்படையான ஏபிஎஸ் பாதுகாப்பு அம்சம் டாப் வேரியன்டில் ஏர்பேக் போன்றவை இணைக்கப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.