ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா, நிசான் மற்றும் மிட்சுபிஷி என மூன்று நிறுவனங்களும் எதிர்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள வாகனங்கள், உதிரி பாகங்கள் உள்ளிட்ட அடிப்படையான தொழில்நுட்பங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்துட்டுள்ளன. இதில் மிட்சுபிஷி இணைவது குறித்தான இறுதி முடிவு மட்டும் ஜனவரி 2025 இறுதிக்குள் அறிவிக்க உள்ளது.
சர்வதேச அளவில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடுமையான சவால் இணைந்து வருகின்றன குறிப்பாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து ஆட்டோமொபைல் சந்தையில் அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை சமாளிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் கூட்டமைப்பில் இணைய தொடங்கியுள்ளன.
அந்த வகையில் ஏற்கனவே ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா மற்றும் சுசுகி இணைந்து பல்வேறு மாடல்களை ரீபேட்ஜ் இன்ஜினியரிங் மூலம் பகிர்ந்து கொண்டு அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த நிலையில் மூன்று ஜப்பானிய நிறுவனங்களும் இணைந்து மிகப்பெரிய மாற்றத்தை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்த உள்ளன. அதே நேரத்தில் சீனாவின் போட்டியை சமாளிக்கவும் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. குறிப்பாக இந்த ஹோல்டிங் நிறுவனமானது அனைத்து விதமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் உள்ளிட்ட அனைத்திலும் பகிர்ந்து கொள்வதுடன் ICE, HEV, PHEV, மற்றும் EV என அனைத்து பிரிவிலும் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
தனித்தனியாக கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் அதே வேளையில் வாகனங்களுக்கான தரப்படுத்த்தி செலவுகளை கட்டுப்படுத்தவும், உற்பத்தி செயல்திறனை பகிர்ந்துகொள்வதன் மூலமும், விநியோகச் சங்கிலி செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் நிறுவனங்கள் தங்கள் செயல்திறன் மற்றும் வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.
ஆகஸ்ட் 2026க்குள் அதிகாரப்பூர்வமாக ஒருங்கிணைப்பை முடிக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன, அதன் பிறகு நிறுவனங்களின் புதிய ஹோல்டிங் நிறுவனம் டோக்கியோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று நிறுவனங்களும் இணையும் பொழுது மிகப்பெரிய அளவில் ஹைபிரிட், எலெக்ட்ரிக் உள்ளிட்ட வாகன பிரிவுகளில் மிகப்பெரிய தரவுகளை பயன்படுத்தி இதன் மூலம் எதிர்காலத்தில் திறன் வாய்ந்த வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றன.