இந்தியா பயணிகள் வாகன சந்தையில் நிசான் நிறுவனம் விற்பனை செய்கின்ற கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட, பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகின்ற டட்சன் பிராண்டு மாடல்கள் விலை ஆகியவை அதிகபட்சமாக 2 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
நிசான், டட்சன் கார்கள்
இந்திய சந்தையில் நிசான் இந்தியா நிறுவனம் மைக்ரா, மைக்ரா ஏக்டிவ், சன்னி செடான், டெரானோ எஸ்யூவி உட்பட பிரிமியம் ரக நிசான் ஜிடி-ஆர் ஆகிய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. டட்சன் நிறுவனத்தின் கோ, ரெடி-கோ, மற்றும் கோ பிளஸ் ஆகியவற்றை விற்பனை செய்கின்றது.
மாறி வரும் சூ ழ்நிலை, அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்கள் ஆகியவற்றில் கருத்தில் கொண்டு நிசான் பிராண்டு கார்கள் மற்றும் எஸ்யூவி உட்பட இந்நிறுவனத்தின் துனை பிராண்டாக விளங்கும் டட்சன் கார்கள் விலையும் அதிகபட்சமாக 2 சதவீதம் உயர்த்தப்பட்டுவதுடன் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான தரம் மற்றும் சேவையை வழங்க உள்ளதாக இந்நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.60,000 வரை விலை உயர்வை அறிவித்துள்ள நிலையில், அதனை தொடர்ந்து ஆடி ஆடம்பர சொகுசு நிறுவனமும் கார் விலையை உயர்த்தியுள்ளது.