ஜூன் 2023-ல் விற்பனை செய்யப்பட்ட எம்ஜி கார்களின் எண்ணிக்கை 5,125 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய ஜூன் 2022 உடன் ஒப்பீடுகையில் 14% ஆண்டு வளர்ச்சியை பெற்றுள்ளது. (ஜூன் 2022-ல் 4,504 யூனிட்கள்) மற்றும் மே 2023-ல் 5,006 எண்ணிக்கையை விட 2.39% அதிகரித்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் 2023 வரையிலான விற்பனை எண்ணிக்கை 14,682 மொத்த விற்பனை ஆண்டுக்கு ஆண்டு கணிசமான அதிகரிப்பு (Q2 CY2022: 10,520 அலகுகள்), Q2 CY2023 விற்பனையானது Q1 CY2023-ல் 14,358 அலகுகளில் 2.25% அதிகரித்துள்ளது.
MG Motor Sales Report – June 2023
எம்ஜி மோட்டார் அறிக்கையில், குஜராத்தில் உள்ள ஹலோலில் தனது ஆலையில் “பைபார்ஜாய் புயல் காராணமாக தொடர்ந்து விநியோகம் தடைபட்டது, இருப்பினும் பருவமழையைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிக்க காரணமாக இருக்கும். ஏனெனில் இந்தியா நீண்ட பண்டிகைக் காலத்திற்கு தயாராகிறது என குறிப்பிட்டுள்ளது.