மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் 2022 முதல் வரவுள்ள அனைத்து மாடல்களிலும் மின்சாரத்தில் இயங்கும் வேரியன்ட் ஒன்று அப்ஷனலாக வழங்கப்படும் என டைம்லர் நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.
2022 முதல் மின்சார கார்கள்
சர்வதேச அளவில் மின்சார கார்கள் தயாரிப்பதற்கான நடவடிக்கையை பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் பரவலாக முன்னெடுத்து வரும் நிலையில் டைம்லர் குழுமத்தின் கீழ் செயல்படும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிர்வாக இயக்குநர் டைட்டர் ஜெட்சே அதிகார்வப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிறுவனத்தின் மற்றொரு ஸ்மார்ட் பிராண்டு காரில் உள்ள அனைத்து மாடல்களிலும் 2020 முதல் மிக சிறப்பான ரேஞ்ச் மின்சார கார்கள் மட்டுமே விற்பனைக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரசத்தி பெற்ற மெர்சிடிஸ் கார்களில் மின்சார மாடல்களுக்கு என பிரத்யேக EQ எனும் பிராண்டினை செயல்படுத்த தொடங்கியுள்ளது. இந்த பிராண்டில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQA என்ற கான்செப்ட் மாடலை ஃபிராங்ஃபேர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.